2014ம் ஆண்டில் வேலைவாய்ப்பு சந்தை சிறப்பாக இருக்கும் என மனிதவளத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டைப் போல அல்லாமல் நடப்பு ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாகும் சூழல்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறியள்னர். இன்று பிறந்துள்ள ஆண்டில் புதிதாக எட்டரை லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.உலக பொருளாதாரம் இவ்வாண்டு சிக்கல்களில் இருந்து மீளும் வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளதாக கூறும் நிபுணர்கள், இது இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.