மார்ச் 2014 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் www.tndge.in என்ற இணைய தளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் 17.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 2014 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் www.tndge.in என்ற இணைய தளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் 17.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 


நடைபெறவுள்ள மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல்களில் தவறு இருப்பின், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு மையத்தின்மூலம் (Nodal Centre) ஆன்-லைனில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பல வாய்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.


இத்திருத்தங்களின் அடிப்படையில், தற்போது, தேர்வு மையம் மற்றும் பதிவெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மாணாக்கர் பெயர்ப் பட்டியல் ஆன்-லைனில் 17.01.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ள அனைத்து இணைப்புப் பள்ளி மாணவர்களின் பெயர்களை ஒருங்கிணைத்து பதிவெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, ஒவ்வொரு பள்ளியிலும் மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கருக்கு தொடர் பதிவெண்கள் (Continuous Register Numbers) ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


பெயர்ப் பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்பட்ட விவரத்தை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அறிந்து பின்னர் பெயர்ப் பட்டியலை ஒரு பிரதி எடுத்து பள்ளியின் பெயர் அல்லது மாணாக்கரின் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், திருத்தங்களை சிவப்பு மையினால் மேற்கொண்டு 21.01.2014 முதல் 23.01.2014 வரை ஆன்-லைனில் மாவட்டக் கல்வி அலுவலர் குறிப்பிடும் “திருத்தங்கள் மேற்கொள்ளும் மையத்திற்கு” எடுத்துச் சென்று திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தற்போது வழங்கப்படும் வாய்ப்பே இறுதி வாய்ப்பு எனவும், இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இறுதி மாணவர் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது எனவும், குறிப்பாக, முதன்மை விடைத்தாளுடன் இணைக்கப்படும் தேர்வர்களின் விவரங்கள், புகைப்படம் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்புத்தாளில் (Top Sheet containing Barcode, Photo and candidate’s data) உள்ள விவரங்கள் இதன் அடிப்படையிலேயே தயாரிக்கப்படவுள்ளதால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் இப்பொருள் மீது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சரியான விவரங்கள் கொண்ட முகப்புத்தாட்கள் (Top sheet) அச்சடித்திட தற்போது வழங்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்கள் பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றிட, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தற்போது வழங்கப்படும் வாய்ப்பே இறுதி வாய்ப்பு என்பதால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / வகுப்பு ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்தி இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி