கேட் 2013 தேர்வில் உச்ச மதிப்பெண் பெற்ற அனைவரும் ஆண்கள்!

2013 கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதன் படி, உச்ச மதிப்பெண்கள் பெற்ற அனைவரும், பொறியியல் பட்டதாரிகளாகவும், ஆண்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 8 பேர் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருமே, ஆண் பொறியியல் பட்டதாரிகள் என்பதுதான் சிறப்பம்சம். அவர்களில் இருவர், பொறியியலில் முதுநிலைப் பட்டப் படிப்பும், மற்றவர்கள், இளநிலைப் பட்டப் படிப்பும் முடித்தவர்கள்.


அவர்களில், 3 பேர், 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவர்கள். 100% மதிப்பெண் பெற்ற 8 பேரில், 3 பேர் மும்பை நகரையும், தலா ஒருவர், டில்லி மற்றும் ஐதராபாத் நகரங்களையும் சேர்ந்தவர்கள்.

இதர மூவரில், சமல்கோட், செகந்தரபாத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களிலிருந்து தலா ஒருவர் அடங்குவர். இந்த நகரங்கள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது.

கேட் 2013 தேர்வில் 99.99% மதிப்பெண்கள் பெற்ற 10 பேரில், ஒரே ஒருவர் மட்டுமே பெண். இந்த ஆண்டு, IIM -களில் 115 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 3,335 இடங்கள் உள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி