துபாய், ஜன. 6- உலகின் செல்வ வளமை மிகுந்த நாடுகளில் ஒன்றான துபாயில் 'இன்ஃபினிட்டி ஷாப்பிங் ஃபெஸ்ட்டிவல்-2014' என்ற பெயரில் வர்த்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
இங்கு வரும் பார்வையாளர்கள் நாள்தோறும் இந்த வர்த்தக திருவிழாவில் விற்கப்படும் லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தன்னை தேடி வந்த இந்த பேரதிர்ஷ்டம் குறித்து கேரள மாநிலத்தை சேர்ந்த குட்டிபாலக்கல் கூறியதாவது:-
10 ஆண்டுகளாகவே எனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த வர்த்தக திருவிழாவில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த ஆண்டு நான் மட்டும் தனியாக ஒரு சீட்டு வாங்கினேன். இந்த ஆண்டு எப்படியும் எனக்கு பரிசு கிடைத்து விடும் என்று எனது உள்ளுணர்வு கூறியது.
அதேபோல், இம்முறை எனக்கு முதல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தான் என் மனைவிக்கு பிரசவம் நடந்தது. இந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் தான் எனக்கு பரிசு மழையாக பொழிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
பரிசு பணத்தில் ஒரு பகுதியை நண்பர்களுக்கும், கேரளாவில் உள்ள உறவினர்களுக்கும் கொடுத்து விடுவேன். மீதி பணத்தை வைத்து கேரளாவில் உள்ள எனது வீட்டை பெரியதாக்கி கட்டுவேன். ஆனால், இந்த 2 சொகுசு கார்களையும் என்ன செய்வது என்பது தான் புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.