14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு

வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு, மராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுசெய்து, அதன்படி, அங்கே அதிக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் வெளியானதையடுத்து, அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012ம் ஆண்டு மாநில அரசு தடைவிதித்தது.

அளவுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு சரியான பணி ஒதுக்கப்படவில்லை என்றால், இந்த தடை நீடிக்கும் என கடந்த 2012ல் மாநில அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது. இதன்மூலம் மேற்கண்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி