புதுடில்லி: மக்களுக்கு மானியத்துடன் கூடிய காஸ் சிலிண்டர் 9 ஆக இருக்கிறது. இது போதாது 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இன்றைய காங்., கமிட்டி கூட்டத்தில் பேசும் போது ராகுல் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். இந்த கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. பெட்ரோலிய துறை அமைச்சகம் 12 ஆக உயர்த்திட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் என தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர் என்பது நீண்ட காலமாக இருந்து வந்த கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.