புதுடெல்லி, ஜன. 15 : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம் மூலம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாத ஓய்வூதியம் பெறுபவர்களில் சுமார் 22 லட்சம் பேர் மாதம் தோறும் ரூ. 1000க்கு கீழ் தான் பென்சன் பெற்று வருகிறார்கள்.
மத்திய தொழிலாளர் நலத்துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி குறைந்த பட்ச மாத ஒய்வூதியத்தை ரூ. 1000 ஆக நிர்ணயிக்க கோரி மத்திய நிதி அமைச்சகத்திடம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிய வந்துள்ளது.
பாராளுன்றத்துக்கு தேர்தல் வர உள்ளதால் பென்சன் தாரர்களை கவர மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. குறைந்த பட்ச மாத ஓய்வுதியம் ரூ. 1000ஆக அதிகரிக்கப்பட்டால் 22 லட்சம் பேரும், 5 லட்சம் விதவைகளும் பயன் அடைவார்கள்.
மாத ஓய்வூதியம் ரூ. 1000 ஆக உயரும் பட்சத்தில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1300 கோடி செலவாகும் என்று தெரிகிறது.
தற்போது வருங்கால வைப்பு நிதிக்கு, மாதம் ரூ. 6500–க்கு மேல் மாதச் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டது. இந்த உச்ச வரம்பை மாத சம்பளம் ரூ. 15 ஆயிரம் வரைக்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.