அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களின் கனவு பலிக்குமா?

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களே முதல் மூன்று இடங்களை அதிகளவில், பிடிக்கின்றனர்; 100 சதவீத தேர்ச்சி பெறுவதில், தனியார் பள்ளிகளே முன்னிலையில் உள்ளது; இந்நிலை தொடராமல் தடுக்க, வரும் பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு சவாலாக 100 சதவீத தேர்ச்சியுடன் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முக்கிய பாடங்கள் மீண்டும் படிக்க வைக்கப்பட்டு, தினந்தோறும் டெஸ்ட் வைக்கப்படுகிறது.

கணக்குகள், சூத்திரங்கள், அறிவியல் சமன்பாடுகள், வரைபடங்கள், மேப், அறிவியல் படங்கள் என அனைத்தும், மாணவர்களுக்கு திரும்ப திரும்ப கற்பிக்கப்படுகிறது. நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, பின் தங்கிய மாணவர்களும் கூடுதல் மதிப்பெண் பெறும் வகையில், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாணவர்களின் நலன் கருதி அரசு தரப்பில் 14 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், கல்வி தரத்தை உயர்த்தவும், உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தரப்பில் முழுவீச்சில் சிறப்பு வகுப்புகளில் பாடம் நடத்துவது, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் மாணவர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகிறது.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி என்பதே, ஆசிரியர்களின் நோக்கமாக உள்ளது; சில மாணவர்கள் அலட்சிய போக்குடன்தான், சிறப்பு வகுப்புகளுக்கும் வருகின்றனர். அவர்களது எதிர்கால நன்மைக்காகத் தான், இந்த வகுப்பு நடத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு, பல மாணவர்களிடம் இல்லை; ஆசிரியர்களுடன், மாணவர்களும் ஒத்துழைத்தால் 100 சதவீத தேர்ச்சியை பெற முடியும்,' என்றார். 


அதிக மதிப்பெண்களுடன் 100 சதவீத தேர்ச்சி என்பதே, ஆசிரியர்களின் நோக்கமாக உள்ளது; சில மாணவர்கள் அலட்சிய போக்குடன்தான், சிறப்பு வகுப்புகளுக்கும் வருகின்றனர். அவர்களது எதிர்கால நன்மைக்காகத் தான், இந்த வகுப்பு நடத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு, பல மாணவர்களிடம் இல்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி