10 ஆயிரம் இடங்களுக்காக நடத்திய 15 தேர்வு முடிவுகள் இழுபறி : டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த, இரு ஆண்டுகளில், நடத்திய குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவை வெளியிடாமல், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து, தேர்வர்கள், இன்று, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட, முடிவு செய்துள்ளனர்.குரூப் - 2 : கடந்த, 2012, நவ., 4ல், உதவி பிரிவு அலுவலர், நகராட்சி கமிஷனர், சார் - பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 2,306 பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடந்தது. இதில், நேர்முக தேர்வு கொண்ட, மேற்படி பதவிகளுக்கு, 1,064 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், நேர்முக தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்காக, அதே தேர்வை எழுதியவர்களுக்கு, இதுவரை, தேர்வு முடிவை வெளியிடவில்லை. 1,242 பணியிடங்களுக்கு, தேர்வாணையம் ஒப்புதல் பெற்றுஉள்ளதாக கூறப்படுகிறது.


உதவி பிரிவு அலுவலர்இந்து அறநிலையத் துறையில், உதவி பிரிவு அலுவலர் (மொழி பெயர்ப்பாளர்) பணிக்கான தேர்வு, 2013, பிப்., 3ல் நடந்தது. இதற்கு, தேர்வு முடிவை வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, நேர்முகத் தேர்வையும் நடத்தி விட்டனர். ஆனால், அதன் முடிவை மட்டும், இன்னும் வெளியிடவில்லை.உதவி பொறியாளர்பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டவற்றில், 222 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, 2012, டிசம்பர், 9ல், போட்டி தேர்வு நடந்தது. இதற்கு, நேர்முகத் தேர்வு முடிந்தும், இதுவரை, முடிவை வெளியிடவில்லை.


குரூப் - 4 : கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல், 5,566 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு நடந்தது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர், தேர்வை எழுதினர். இதன் முடிவும், இன்னும் வெளியாகவில்லை.
இப்படி, கடந்த இரு ஆண்டுகளில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட, 15 தேர்வுகளின் முடிவு, இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து, தேர்வர்கள் கூறுகையில், "எப்போது கேட்டாலும், "விரைவில் வெளியிடுவோம்' என்ற பதிலையே, திரும்ப, திரும்ப கூறுகின்றனர். தேர்வாணையத்தின் செயலை கண்டித்து, 24ம் தேதி காலை, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என, தெரிவித்தனர்.


தேர்வாணைய வட்டாரம் கூறுகையில், "உதவி பொறியாளர், குரூப் - 2 ஆகிய தேர்வுகளின் முடிவுகள், தயாராக உள்ளன. ஓரிரு நாளில் வெளியாகிவிடும். இதர தேர்வுகளின் முடிவுகளும், படிப்படியாக வெளியாகும்' என, தெரிவித்தது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி