10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு பொறுப்பாளரை தேர்வுத்துறையே தேர்ந்தெடுக்கும்

தேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

தற்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மையங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள்,அறைக் கண்காணிப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது.


இதன்படி, பணிமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்வுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பிற்கு, பட்டதாரி ஆசிரியர்கள் என, பட்டியல் தயாரித்து, இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தலைமை தேர்வாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் என அனைத்து முக்கிய பொறுப்புகளில் இடம் பெறுவோரை, தேர்வுத்துறை இயக்குனரே முடிவு செய்வார். இதன் மூலம் ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் "இணக்கமான உறவு" முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி