சென்னை -டிசம்பர் 31: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்.மலர்விழி- சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான இயக்குநராகவும், எஸ். பழநிச்சாமி- பள்ளிகல்வித்துறை துணை செயலாளராகவும், டாக்டர் எஸ்.பிரபாகரன்- பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராகவும், கே.எஸ். கந்தசாமி- நில நிர்வாக இணை ஆணையராகவும், சி.கதிரவன்- விவசாத்துறை கூடுதல் இயக்குநராகவும், எப். இன்னோசன்ட் திவ்யா - முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும், சுரேஷ்குமார்- தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குநராகவும், ஆர்.கஜலட்சுமி- தமிழ்நாடு பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இணை இயக்குநராகவும், எம். லட்சுமி- சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராகவும், எஸ். கணேஷ் -தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண் இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி : தினமலர்