மீண்டும் பணியமர்த்த தீர்ப்பு ஆசிரியரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

புதுச்சேரி கல்வித்துறை வழங்கிய காரைக்கால் ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உடனடியாக ஆசிரியரை பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, காரைக்கால் விரிவுரையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 
காரைக்கால் அக்கரைவட்டம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த பட்டதாரி ஆசிரியர் மதியழகனின், நீண்டநாள் விடுப்பு கடிதத்தை ஏற்காமல், தன்னிசையாக புதுச்சேரி கல்வித்துறை மதியழகனை பணி நீக்க உத்தரவு வழங்கியது. இந்த உத்தரவால் மனம் நொந்துபோன மதியழகன், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கடேஸ்வரராவ், சோசம்மா ஆகியோர், காரைக்கால் ஆசிரியர் மதியழகனுக்கு வழங்கப்பட்ட பணி நீக்க உத்தரவானது அதிக பட்ச தண்டனை என்று சுட்டிக்காட்டி, ஆசிரியரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தனர். மேலும், வருகிற 4 வாரங்களுக்குள் உடனடியாக மதியழகனை மீண்டும் தொடர்ச்சி மற்றும் பணி பலன்களுடன் பணியில் அமர்த்தவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். இது காரைக்கால் ஆசிரியர் மதியழகனின் பல ஆண்டு நற்பணிக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி