ஒரு கை ஓசை எழுப்பும் பி.டெக்., மாணவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார்.
நிஜாமாபாத் நகரில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில், பி.டெக்., படித்து வருகிறார் சவுஜன்யா. ஒரு கை ஓசை தராது; இரண்டு கைகள் சேர்ந்தால் தான் ஓசை எழும் என்ற பழமொழியையே செல்லாததாக்கி விட்டார். தன் கையை தானே உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி ஓசையை எழுப்புகிறார். 1 நிமிடத்திற்கு 300 முறைக்கும் மேலாக ஒரு கையால், அவர் தட்டுகிறார்.
இதை நிமிடத்திற்கு 360 தடவைகளாக உயர்த்த வேண்டும் என இவர் விரும்புகிறார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள சவுஜன்யா, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற துடிக்கிறார்.
உலகில் ஒரு சிலரே ஒரு கையால் ஓசை எழுப்புகின்றனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில், சவுஜன்யாவின் பெயரும் விரைவில் இடம் பெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.