சிறப்பு போலீஸ் இளைஞர் படை உடற்தகுதி தேர்வு நாளை துவக்கம்.

தமிழகத்தில் நாளை துவங்கும் சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வில், 46,865 பேர் பங்கேற்கின்றனர். 

இவர்களில் 10,500 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதால் தேர்வில் ஆட்குறைப்பு அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படையில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மாநிலம் முழுவதும் 10,500 பேர் தேர்வு செய்யப்படுவர். மாத மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு போலீஸ் வாகனங்களை ஓட்டுதல், அலுவலக கடிதங்களை பட்டுவாடா செய்தல், கம்ப்யூட்டரில் விவரங்களை பதிவு செய்தல், போலீஸ் குடியிருப்புகளை பராமரித்தல், விபத்தில் உயிர்ப்பலிகள் ஏற்படா வண்ணம் தடுத்தல் உட்பட பல பணிகள் ஒதுக்கப்படும். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த நவ.,10 ல் எழுத்து தேர்வு நடந்தது.அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு, நாளை துவங்குகிறது. 

இதில், தமிழகம் முழுவதும் இருந்து 46,865 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 10,500 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதால், 5 பேரில் ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், தேர்வில் ஆட்குறைப்புக்கு கடுமையான விதிகள் பின்பற்றப்பட உள்ளன.மார்பளவு, உயரம், வயது, சான்றிதழ், 1,500, 400, 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உட்பட பலவித தேர்வுகள் நடத்தப்பட்டு, அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி