முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் பணியிடங்கள் மாயம்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் வட்டார வள மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள், 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசுமேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.அதே நேரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும், தமிழகம் முழுவதும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நேற்று காலை 10மணிக்கு தொடங்கியது.

அதற்கு முன்னதாக மாவட்டங்களில் காலியாக இருந்த பணியிடங்களின் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில் 73பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மூவரும்,ஆசிரியர் பயிற்றுநர்கள் இருவர், பட்டதாரி ஆசிரியர்கள் 42 பேர் என47 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வு தொடங்கிய போது பல மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாயமாகி இருந்தன. வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலுக்கும், கணினி திரையில் காண்பித்த பட்டியலுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி