ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி, 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சி.பி.எஸ்.இ., வாரியத் தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார்.
ஐ.ஐ.டி., டிரிபிள் ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,களில் சேர்வதற்கு, ஜே.இ.இ., முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க, இம்மாதம் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை, பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்; கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, 12 லட்சத்தை எட்டும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில்,ஐ.ஐ.டி., நுழைவுக்கான, 'ஜே.இ. இ.,-அட்வான்ஸ்டு' தேர்வு எழுதும், 1.5 லட்சம் மாணவர்களில், 'டாப் 14-15' மாணவர்களுக்கு, அவர்கள் பிளஸ் ?வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், ஐ.ஐ.டி.,யில் இடம் கிடைக்கும். ஜே,இ.இ., முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, டிரிபிள் ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்களில் இடம் கிடைக்கும்.