முதுநிலை தமிழாசிரியர் நியமன கவுன்சலிங் இன்று( 30/12/2013) தொடக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடந்தது. தமிழ் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்கள் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 11ம் தேதி வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இதையடுத்து ஒரு பதவிக்கு ஒருவர் வீதம் சான்று சரிபார்ப்பு நடத்துவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 23ம் தேதி இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அழைப்பு கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் தேர்வு எண்ணை பதிவு செய்து இணைய தளத்தில் இருந்து அழைப்புக் கடிதங்கள் மற்றும் கவுன்சலிங்கில் பங்கேற்கும் போது பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய படிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சான்று சரிபார்ப்பின் போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு இறுதி தெரிவு பட்டியல் வெளியிடப்படும். 


முதுநிலை பட்டதாரி தமிழாசிரியர்களுக்கான தேர்வை 32,000 பேர் எழுதினர். தற்போது மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 602 இடங்களில் மேற்கண்ட தமிழாசிரியர்களை நியமிக்க 649 பேர் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிஆர்பி நடத்தும் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான கவுன்சலிங் பெரும்பாலும் சென்னையில்தான் நடப்பது வழக்கம். ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் வெளி மாவட்டங்களில் இப்போது கவுன்சலிங் நடக்கிறது. 


சான்று சரிபார்ப்பு நடக்கும் இடங்கள்:


* மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி- மதுரை, தெப்பகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலை பள்ளி.


* சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர்- சேலம், சூரமங்கலம், ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா மேல்நிலை பள்ளி.


* திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை- திருச்சி, புதூர், பிஷப் ஹீப்பர் மேல்நிலை பள்ளி.


* விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை- விழுப்புரம், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.


* வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி-வேலூர், ஊரிஸ் மேல்நிலை பள்ளி.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி