பிஎப் வட்டி உயருமா? ஜனவரி 13ல் தெரியும்

தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

இவர்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎப் தொகைக்கு 2011&2012 ஆண்டில் வட்டி 8.25% வழங்கப்பட்டது. இந்நிலையில், 8.25 சதவீதத்தை உயர்த்தி 2012&2013ம் ஆண்டில் வட்டி தொகை 8.5% ஆக வழங்கப்பட்டது. இதன் மூலம் பிஎப் தொழிலாளர்களின் ஒட்டு மொத்த கணக்கில் ரூ.56.96 கோடி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக பிஎப் தொகை ரூ.20,796.96 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப்க்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இந்நிலையில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சரும், பிஎப் அமைப்பின் மத்திய வாரிய அறக்கட்டளை குழுவின் தலைவருமான ஆஸ்கார் பெர்ணான்டஸ் தலைமையில் அறக்கட்டளையின் கூட்டம் ஜனவரி 13ம் தேதி நடக்கிறது. இதில், பிஎப் வட்டி தொகையை உயர்த்துவதா அல்லது தற்போது உள்ள நிலையே தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பிஎப் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு இந்த கூட்டம் நடக்கவுள்ளது என்றும் தற்போது உள்ள வட்டி 8.5 சதவீதமே 2013&14ம் ஆண்டிற்கும் நீடிக்கும் என்றும், வட்டி விகிதத்தை உயர்த்தினால் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் வேண்டும் என்றும், கூடுதலாக நிதி சுமை ஏற்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி