பன்னாட்டு அஞ்சல் தலைகளில் காந்தியடிகள்

மகாத்மா காந்தியடிகளின் படம் பொறிக்கப்பட்ட பன்னாட்டு அஞ்சல் தலைகளை சேகரித்து திருக்கழுகுன்றத்தைச் சேர்ந்த அஞ்சல் தலை சேகரிப்பவர் சாதனை படைத்துள்ளார். மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த வகையில் நாகர்கோவிலைச் சேர்ந்த குமாரசாமி, இளம் வயது முதல் அரியவகை அஞ்சல், நாணயங்களைச் சேகரித்து வருகிறார்.நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் இப்போது திருக்கழுகுன்றத்தில் வசித்து வருகிறார். மகாத்மா காந்தியடிகளின் இளமைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையிலான பல்வேறு புகைப்படங்கள் அடங்கிய பன்னாட்டு அரியவகை அஞ்சல் தலைகளைச் சேகரித்து வைத்துள்ளார்.அந்த வகையில் ஸ்காட்லாந்து, ரஷ்யா, நேபாளம், மெக்சிகோ, கியூபா, மொரீசியஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகளில் வெளியான அஞ்சல் தலைகளை சேகரித்து வைத்துள்ளார்.
காந்தியடிகள் உலக மக்களை கவர்ந்த தலைவர் என்பதற்கு இந்த அஞ்சல் தலைகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.கதர் துணியில் அஞ்சல் தலை: இது தவிர இந்திய தபால்துறை வெளியிட்ட பல அரியவகையான காந்தி படம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலைகளையும் சேகரித்து வைக்க குமாரசாமி தவறவில்லை.அவர் சேகரித்து வைத்துள்ள இந்திய அஞ்சல் தலைகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான கதர் துணியில் காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூ. 100 மதிப்புள்ள அஞ்சல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.இது தவிர கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட காந்தி உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் சேகரித்து வைத்துள்ளார். ÷இந்த ரூபாய் நோட்டுகள் இக்கால இளைஞர்கள் பார்ப்பது மிகவும் அரிதானதாகும். இந்த ரூபாய் நோட்டுகள் இப்போது முற்றிலும் புழக்கத்தில் இல்லை.இது குறித்து குமாரசாமி கூறியது: "எனது பள்ளிப் பருவத்தில் குறிப்பாக 6-ஆம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அஞ்சல் தலை, நாணயம் சேகரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு அப்போதே எனது பெற்றோர்கள் ஒத்துழைத்தனர். பொழுதுப்போக்காக தொடங்கிய இந்த சேகரிப்பு பழக்கம், இப்போது, எனது முழு நேர தொழிலாகி விட்டது. ÷அரிய வகையிலான அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் ஆகியனவற்றை என்ன விலை கொடுத்தாவது, வாங்கி வந்து விடுவேன். ÷இப்போது தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் கண்காட்சிகள் நடத்தி வருகிறேன். இன்றைய மாணவர்களுக்கு இப்பழக்கம் ஏற்பட வேண்டும்.அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார் குமாரசாமி.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி