கோர்ட் நடவடிக்கைகளில், தாமதம் கூடாது" என அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசுக்கு எதிராக, ஆசிரியர்கள் வழக்கு தொடரும்போது, அதற்கு முறையாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை, பதில் மனுதாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், மேல்முறையீட்டில், காலதாமதம் செய்வது போன்றவற்றால், அரசுக்கு எதிராக, தீர்ப்புகள் கிடைக்கின்றன. இதை தடுப்பதற்காக, கோர்ட் வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உடனடியாக, பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.கல்விச் செயலரை பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட வழக்குகளில், அவரது பெயரை நீக்க, அரசு வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயக்குனர் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட வழக்குகளில், மேல்முறையீடு குறித்து, காலதாமதமின்றி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.