தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள்வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம்தேதிக்கு முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலை செயல் அலுவலர் பதவிக்கான தேர்வுஅக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.