சிறப்புப்படி (S.A).மற்றும் தனி ஊதியம் (P.P) பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்

 இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
 அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/-
per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.
இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010முதல் பெற்றனர்.

பின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.

இதில் பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பத்தி 4 - இன் இறுதியில் " மேலும்தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம்4300/- மற்றும் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." என்றும் உள்ளது.

சிறுவிளக்கம் உங்களுக்காக:
இதில் குறிப்பிடப்பட்டுள்ள "சாதாரண நிலையில்" என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தணிக்கை தடை என்று பணத்தை திருப்பிகட்ட கூறுவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் 5200-20200 +2800இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள்1.1.2011 இல் தேர்வுநிலையை அடைந்திருந்தால் தனி ஊதியம் 750பெற இயலாது என்பதாகவும்ஏனெனில் தனி ஊதிய அரசாணையில் சாதாரண நிலையில் என்று உள்ளது என தணிக்கையர்கள் கூறுகின்றனராம்.

இங்கு கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.
S.A. வழங்கும்போது GRANTED TO SECONDARY GRADE TEACHERS என இருந்தததால் இதனை பெற்றவர்களை பட்டியலிட்டால்
1. 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்று தேர்வுநிலை முடிக்காதோர்.(சாதாரண நிலை என்று வைத்துகொள்ளுங்களேன் )
2. 1.6.2009 -க்கு பின்னர் தேர்வுநிலை பெற்று 5200 - 20200 + தனி ஊதியம் 2800 பெற்றுகொண்டிருப்போர்.
3. இடைநிலை ஆசிரியர் தேர்வுநிலையினர் 9300-34800 + 4300நிலையினர்.
4. இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலையினர் 9300-34800 + 4500நிலையினர்
(அதாவது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களும் சிறப்பு படி பெற தகுதிடையவ்ர்கள் )
இதில் நாம் குறிப்பிட்டுள்ள வரிசை எண் 3 மற்றும் 4 இல் உள்ளவர்கள் அரசாணை 23 இன் பத்தி 4 - இன் இறுதியில்உள்ள " மேலும்தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் முறையே ரூ.9300-34800 + தர ஊதியம் 4300/- மற்றும் ரூ.9300 - 34800 +தர ஊதியம் ரூ.4500/- பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் (தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலையில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு) தற்போது வழங்கப்பட்டுவரும் சிறப்புபடியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது." வரிகளின்படி சிறப்புபடி தொடர்ந்து பெற தகுதி பெறுகின்றனர்.
இவர்களுக்கு தொடர்ந்துபெற தகுதி பெறுகின்றனர் என்றால்,இவர்களைத்தவிர மேலும் சிறப்புபடி பெற்று வந்தவர்களுக்கு என்ன நிலை?
அவர்களுக்கு "தற்போது வழங்கப்படும் ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது." என்ற வரிகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பத்தி 4 இன் வரிகளை திரும்ப படியுங்கள்:
பத்தி 4 - இல் " இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தத்திற்கு மாற்றாக ஒரு நபர் குழுவின் அடிப்படையில் தற்போது சாதாரண நிலையில் 5200 - 20200 + தர ஊதியம் 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.500/-சிறப்புப்படிக்கு பதிலாக மாதம் ரூ.750/- ஆக உயர்த்தி அதனை தனி ஊதியமாக வழங்க அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சாதாரண நிலையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் 1.6.2009 -க்கு பிறகு தேர்வு நிலை பெற்று 5200 - 20200 + 2800 இல் உள்ளவர்களுக்கு தனி ஊதியம் இல்லை என்கின்றனர்.

இவர்களை0தேர்வுநிலை பெற்றவர்கள் பட்டியலில் வைத்தால்சிறப்புபடியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்ட தேர்வு/சிறப்பு நிலை பெற்றவர்களுடன் இவர்களையும் இணைத்திருப்பார்கள் அல்லவாஅப்படி சிறப்பு படியை தொடர்ந்து பெற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 5200-20200+2800 பெறும் தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இடம் பெறாததால் இவர்கள் தனி ஊதியம் பெறவே தகுதி பெற்றவர்கள்.

இதுசார்ந்து நாமக்கல் கருவூல அலுவலர் கோரிய தெளிவுரைக்கு சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்கள் அளித்த பதிலை மீண்டும் படியுங்கள்.
நன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு


(மேற்காணும் கட்டுரை அறிந்த வரையில் விளக்கப்பட்டுள்ளது,சார்ந்து தெளிவுரை தேவைப்பட்டு அரசால் அளிக்கப்பட்டால் அவையும் வெளியிடப்படும்மேலும் தங்களின் மேலான கருத்துக்கள் கட்டுரைக்கு வலு சேர்க்கும்)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி