பி.எப்., கணக்கில் பணம் : இன்று முதல் ஆன் - லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள, ஐந்து கோடி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின், வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கு விவரங்கள்,இன்று முதல், ஆன் - லைன் மூலம் தெரிய வருகிறது. வழக்கமாக வழங்கப்படும் சிலிப்புகளுக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தங்களின் கணக்கு விவரங்களை, இணையதள வசதி கொண்ட கம்ப்யூட்டர்களில் பார்த்துக் கொள்ளலாம்; நகல் எடுத்துக் கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி :தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஒவ்வொரு மாதமும் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எவ்வளவு தொகை, அந்த ஊழியரின்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், ஆண்டுக்கு ஒருமுறை, துண்டுச் சீட்டுகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த முறையில் மாற்றம் செய்துள்ள, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், பி.எப்., கணக்கு விவரங்களை, கம்ப்யூட்டர்மயமாக்கி, அவற்றை, தொழிலாளர்கள், நிறுவனத்தின் ஆன் - லைனில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதி, இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இ.பி.எப்., நிறுவனத்தில் கணக்கு துவக்கியுள்ள சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகை, அதற்கான வட்டி போன்ற விவரங்களை, இன்று முதல் ஆன் - லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அமைச்சர் துவக்குகிறார் இந்த வசதியை, மத்தியதொழிலாளர் நலத்துறை அமைச்சர், சிஸ்ராம் ஓலா, டில்லியில் இன்றுகாலை துவக்குகிறார். இது குறித்து, இ.பி.எப்., அமைப்பின் மத்திய கமிஷனர், கே.கே.ஜலான் கூறும் போது,""நடப்பு நிதியாண்டிற்கான வட்டி வீதம் இன்னும் முடிவாகாததால், அந்த விவரங்களைப் பார்க்க முடியாது,'' என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி