பதவி உயர்வை வெறுக்கும் அரசு அலுவலர்கள் "ஈகோ'வால் வேலை வாங்குவதில் பிரச்னை

தேர்வு நிலை,சிறப்பு நிலை பெற்றவர்களை விட, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு,சம்பள உயர்வு குறைவாக வழங்குவதால்,பதவி உயர்வை, அரசு அலுவலர்கள் வெறுக்கின்றனர்.மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் அடிப்படையில், தமிழக அரசும் அதன் பரிந்துரைபடி, திருத்திய ஊதிய விகிதத்தை நிர்ணயித்து ஆசிரியர்,அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தியது.


இதில் முரண்பாடு இருந்ததால், அரசு ஒரு நபர் குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. 10 ஆண்டுகள் பணியாற்றி தேர்வுநிலை (செலக்ஷன் கிரேடு), 20 ஆண்டுகள் பணியாற்றி சிறப்பு நிலை (ஸ்பெஷல் கிரேடு) பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. ஒருநபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில்,இது 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது.ஆனால் பதவி உயர்வு பெறும்,ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இது 3 சதவீதமாகவே உள்ளது.ஒரு அரசு ஊழியர் 10 ஆண்டு முடியும் தருவாயில்,பதவி உயர்வு பெற்றால், அவருக்கு 3 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது உள்ள அரசாணையின்படி, 10 ஆண்டு பணி முடிந்து, தேர்வு நிலை பெறும் ஆசிரியர்கள், அலுவலர்கள் 6 சதவீத ஊதிய உயர்வு பெறுகின்றனர். இதனால், சீனியர், ஜூனியரை விட குறைந்த ஊதியம் பெறும் நிலை உருவாகி உள்ளது. தற்போது 10 அல்லது 20 ஆண்டு பணிமுடியும் தருவாயில் உள்ளவர்கள், பதவி உயர்வு வாய்ப்பை ஏற்பதா, வேண்டாமா என ஒதுங்குகி ன்றனர்.அரசு அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: இளநிலை உதவியாளராக இருப்பவர்கள், உதவியாளராக பதவி உயர்வு பெறுகின்றனர். 9 முதல் 10 ஆண்டுக்குள் உள்ளவர்கள், இவ்வாறு பதவி உயர்வு பெறும்போது அவர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வே கிடைக்கிறது. அதே நேரத்தில், இளநிலை உதவியாளராக இருப்பவர், 10 ஆண்டு முடிந்தால் தேர்வு நிலைக்கு மாறுகிறார். அப்போது 6 சதவீத ஊதிய உயர்வு பெறுகிறார். இதனால், உதவியாளரை விட, இளநிலை உதவியாளர் அதிக சம்பளம் பெறும் நிலை உள்ளது. இது அரசு அலுவலர்களிடையே மன உளைச்சலை மட்டுமன்றி, குறைந்த சம்பளத்தில் உள்ளவர், கூடுதல் சம்பளம் வாங்குபவரை வேலை வாங்குவதா? என்ற வாக்குவாதமும் உள்ளது. எனவே, 10, 20 ஆண்டு பணி முடித்தவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வை அரசு வழங்க வேண்டும் என்றார். 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி