முதன்முதலாக இணையம்மூலம் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு

அரசுத் தேர்வுத் துறையில், முதன்முதலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மூலமாக தேர்வர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

23.09.2013 அன்று துவங்கவுள்ள மேல்நிலை (12-ம் வகுப்பு) / இடைநிலைக் கல்வி (பத்தாம் வகுப்பு) துணைத் தேர்வினை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், தங்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Slip) இன்று (19.09.2013) காலை முதல் தேர்வு துவங்கும் நாள் (23.09.2013) வரை, www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்விணையதளத்தில், “HIGHER SECONDARY /SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER/OCTOBER 2013 HALL TICKET PRINT OUT” என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of birth) பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத / மிகவும் சிறிதாகப் பதிவாகியுள்ள தனித்தேர்வர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு, உடனடியாக அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும்.

முதன்முறையாக மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள்(HP வகை ) பகுதி I, பகுதி II மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி III-ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல் / பேசுதல் (aural/oral skill test) திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். மொழிப் பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழிப் ( தமிழ்) பாடத்தில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விபரத்தைத் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 21.09.2013 மற்றும் 22.09.2013 தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட மாட்டாது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி