வணக்கம் நண்பர்களே..!
நீங்கள் உங்கள் வலைப்பூவில் பதியும் பதிவுகளை தானாகவே கூகிள் ப்ளஸ் அப்டேட் ஆகுமாறு செய்யும் வசதியை கூகிள் கொண்டுவந்துள்ளது.
இந்த வசதியை நீங்கள் Enable செய்திருந்தால் உடனடியாக நீங்கள் பதியும் பதிவானது கூகிள் ப்ளஸ்சில் அப்டேட் ஆகிவிடும். இந்த வசதியைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் நீங்களாகவே பதிவுகளை share செய்யும் வேலை மிச்சமாகிறது.
கூகிள் ப்ளசில் உங்களுடைய பதிவுகளை ஆட்டோமேட்டிக்கா ஷேர் செய்வது எப்படி?
- பிளாக்கர் கணக்கில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
- கூகிள் ப்ளஸ் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
- Automatically share after posting என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள்.
அவ்வளவுதான். இனி உங்களுடைய புதிய பதிவுகள் கூகிள் ப்ளசிலும் தானாகவே அப்டேட் ஆகிவிடும். (இந்த வசதி தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கும். கூகிள் ப்ளஸ் கணக்கு வைத்திருப்பவர் அனைவருக்கும் இது செயல்படும்.)
இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
குறிப்பு: இந்த Automatically Share After Posting வசதி தேவையில்லை எனில் மீண்டும் அந்த டிக்மார்க்கை எடுத்துவிடுங்கள்.
நன்றி. : www.tholilnutpam.com