பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தமிழ் புத்தகத்தை வாங்கி பார்த்தேன். அதில் 1 ல் 0 வரை உள்ள எண்களை தமிழில் எழுதும் படி கேட்கபட்டிருந்தது. எனக்கு அது தெரியாது என்பதால் அப்பெண்ணிடமே கேட்டேன். உடனே
அப்பெண் “ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 “ என்ற எண்ணுக்கு முறையே
“க, உ, ஞ, ச, ரு, சா, எ, அ, கூ, 0 “ என்றாள்.
இதை எப்படி மனப்பாடம் செய்தாய் என கேட்டேன். அத்தமிழ் எழுத்துகளை வரிசைபடுத்தி வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது ‘க’டுகு ‘உ’ளுந்து ‘ஞ’னைத்து ‘ச’மைத்து ‘ரு’சிச்சு ‘சா’ப்பிட்டேன் ‘எ’ன ‘அ’வள் ‘கூ’றியதைக்கேடு நான் ‘ஓ’ என்றேன்
என்றாள்.
இதை கேட்டு வியந்து பாராட்டினேன். இக்கால பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என புரிந்தது.
தமிழின் சுவையை அவ்வாகியத்தின் மூலம் அறியவும் செய்தேன்.
“தமிழுக்கு அமுதென்று பேர்....” என சும்மாவா சொன்னார்கள்.
நாமும் அறிவோமே