தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்

காரைக்குடி : தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க , நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளையும் இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து (கொலாபரேட்டிவ் சிஸ்டம்) பயிலும் திட்டம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய்வது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வலைதளத்தின் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த செயல்பாட்டினை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் நன்கு படிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிந்து தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடவடிக்கையும் திட்டங்களையும் வெளிக்கொண்டு வர முடியும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்வார்கள்.

இத்திட்டத்தின் முதற் கட்டமாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகள் என 32 மாவட்டங்களில் 128 பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல் தமிழகத்தில் 44 ஆயிரத்து 986 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 52 லட்சத்து 4 ஆயிரத்து 61 மாணவர்கள் படிக்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி