மொபைல் பாதுகாப்பு - அவசியமான குறிப்புகள்தகவல்தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சி மொபைல் சாதனங்கள். இளையோர்கள் முதியவர்கள் வரை அனைவரின் கையில் ஏதாவது ஒரு மாடல் மொபைல் போன்கள் இருந்துகொண்டே இருக்கின்றன.

குக்கிராமம் முதல், தலைநகரங்கள் வரை மக்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் இப்போது மொபைல்போன் வசதிகள் வந்துவிட்டன. 

மக்களில் எந்த வகையினாராக இருந்தாலும் சரி.., எத்தரப்பினராக இருந்தாலும் சரி.. மொபைல்களை கையில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகின்றனர். உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்தளவிற்கு ஊறிப்போன மொபைல் கலாச்சாரத்தில் "மொபைல் பாதுகாப்பு" குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா? என்றால் முழுமையான பாதுகாப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மொபைல் பாதுகாப்பில் தெரிந்துகொள்ள வேண்டியவை: 


  • நம்முடைய இந்தியாவிலேயே எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் பலகோடி மொபைல்களை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அவற்றில் எத்தனை மொபைல்கள பாதுகாப்புடன் இயங்குகிறது? வெறும் 50 சதவிகித மொபைல்கள் கூட சரியான பாதுகாப்புடன் இயங்குவதில்லையாம்..
  • ஏறக்குறைய 55% மொபைல்கள் பாதுகாப்பில்லாமல் இயங்குவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 
  • ஒரு சிறிய கணக்கு இது. இந்தியாவில் உள்ள 50 % விகித மொபைல் போன்கள் பயன்படுத்துவோருக்கு யாரென்றே தெரியாதவர்கள் தினமும் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புகிறார்கள். 
  • அதில் கவர்ச்சிகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். அந்த கவர்ச்சிகரமான தகவல்களில் ஏதேனும் ஒரு இணையதளத்தின் முகவரியும் இடம்பெற்றிருக்கும். 
  • அதில் கிளிக் செய்தால் கோடிக்கணக்கில் பணம் பெற முடியும் என்ற செய்தியும் இடம்பெற்றிருக்கும். 


இப்படி நிறைய கவர்ச்சிகரமான தகவலின் வடிவில் மொபைல்களுக்கோ அல்லது உங்களுடைய தகவல்களுக்கோ ஆபத்து வந்துகொண்டிருக்கும்.

உடனே அதற்கான பதில்களையோ அல்லது அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கோ தகவல்களை அனுப்பிட வேண்டியது.  பிறகு அதனால் ஏற்படும் பாதிப்புகளால் அவதிப்பட வேண்டியது.. இதைத்தான் விடயம் தெரியாதவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்..

ஒருசில SMS கள் இப்படியும் வரும்.  குறிப்பிட்ட மொபைல் நம்பரைக் கொடுத்து அதற்கு தொடர்புகொண்டு பேசச் சொல்லி கேட்டிருப்பார்கள்.

அவ்வாறு வரும் டெக்ஸ்ட் மெசேஜ்களையோ(Text MSG), இணைப்பையோ (Links) கிளிக் செய்து அவர்கள் கூறும் வழிமுறைகளைத் தொடர்ந்தால் நிச்சயம் உங்களைப் பற்றியத் தகவல்கள் அனைத்தும் அவர்களின் கைக்குச் சென்று விடும். குறிப்பாக வங்கி குறித்தான தகவல்களை கேட்டிருப்பின், நீங்கள் அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில் அத்தகவல்களை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம். 

இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்தோ, சந்தேகத்திற்கு உரிய , அதிக ஆசை வார்த்தைகள் கூறி சுண்டி இழுக்கும் டெக்ஸ்ட் மேசேஜ்களையோ பின்பற்றாதீர்கள், அதேபோன்று வரும் கவர்ச்சிகரமான அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். அவ்வாறு கவர்ச்சிகரமான அழைப்புகளெனில் அதைத் துண்டித்துவிடுங்கள்.

மொபைல் பாதுகாப்புக்கென தரமான ஆன்டி வைரஸ் மென்பொருள்களும் அப்ளிகேஷன்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். குறிப்பாக செமான்டெக் நிறுவனம் "நார்டன் ஆன்ட்டி வைரஸ்" மென்பொருளை தயார் செய்து மொபைல் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது. அந்நிறுவன நச்சு நிரல் எதிர்ப்பியையும் பயன்படுத்தலாம். இந்த வைரஸ் எதிர்ப்பியானது தேவையில்லாத வைரஸ் நச்சு நிரல்கள் கொண்ட தகவல்கள் கண்டறிந்து அழிக்கிறது.

கூகிள் தேடலில் மொபைல் ஆண்ட்டி வைரஸ் (Mobile anti virus) என்றோ அல்லது மொபைல் செக்யூரிட்டி அப்ஸ் (Mobile security) என்றோ தேடி , உங்கள் மொபைல்களுக்குப் பொருத்தமான ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் பாதுக்காப்பு குறித்த தகவல்களுக்கு "ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க 5 வழிகள்" என்ற இப்பதிவும் உங்களுக்குப் பயன்படும் என நினைக்கிறேன். சுட்டியைச் சொடுக்கி வாசித்துப் பயன்பெறுங்கள். 

நன்றி.  சுப்புடு
Source : http://softwareshops.blogspot.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி