
இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவ ளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிற து.
ஆற்றுநீர் வாதம் போக்கும் !
அருவிநீர் பித்தம் போக்கும் !!
சோற்றுநீர் இரண்டையும் போக்கும் !!!
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சோற் றுநீர். இதனால் வாத நோய்களான பக்க வாதம் கைகால் அசதி, முடக்கு வாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப் புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக் கும். அத்துடன் கோடைக் கால பாதிப்புகளான வயிற்று வலி, சரு மத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க் குரு, தேக அனல் ஆகியன வராது காக்கு ம். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச். டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்று நீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக் கால பெருமை!
Courtesy : http://asiriyarkudumbam.blogspot.in
Courtesy : http://asiriyarkudumbam.blogspot.in