மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கடன்

மத்திய அரசு 40 சதவீதம் அல்லது அதற்கும் மேல் உடல் குறைபாட்டுடன் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்கப்படுகிறது. சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்துறையின் கீழ், 'தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேன் நிறுவனம் இதற்கான செயல்படுகிறது.பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல்,மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் கல்விக் கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான மாணவர்களிடம் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியும், மாணவியரிடம் 3.5 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி