வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நடக்கும் உதவியாளர் தேர்வுக்கு, சென்னை மற்றும் மதுரையில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி, பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கமும், "எம்பவர்" சமூக நீதி அறக்கட்டளையும் இணைந்து இலவச பயிற்சியை அளிக்கின்றன.சென்னையில் இம்மாதம், 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை, பச்சையப்பன் கல்லூரியிலும், மதுரையில், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புகள், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00மணி வரை நடைபெறுகிறது.பயிற்சி, வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் பிற்பட்ட இனத்தவர், தேர்வு விண்ணப்பத்தை இணைந்து, பயிற்சி பெற விரும்பும் நகரத்தைக்குறிப்பிட்டு, பொதுச் செயலர், பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்நல சங்கம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 139, பிராட்வே, சென்னை - 600 108 என்ற முகவரிக்கு, இம்மாதம், 15ம் தேதிக்குள் விருப்பத்தை அளிக்கலாம்.மேலும் விரவங்களுக்கு, 99451 74128, 94449 93844, 91760 75253, 93810 07998 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்கத் தலைவர், கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி