விடைத்தாள்களில் 'டம்மி' நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு: அரசு தேர்வுத்துறை விரைவில் அறிமுகம்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க அந்த விடைத்தாள்களுக்கு டம்மி நம்பர் கொடுக்கப்படுவதற்கு பதிலாகயாரும் அறியாத வகையில் ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 2014-2015-ம் ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வதந்தி பரவுகிறது.

ஆனால் எந்த தேர்வும் ரத்து செய்யப்படமாட்டாது. இப்போது போல அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் ஆகியோர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தனர். பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ்,ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல்,விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படும்.

இதனால் எந்த விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்காக எங்கு செல்கிறது என்பதை கண்டறிவது சிரமம். இருப்பினும் அந்த தாளை பின்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே டம்மி நம்பருக்கு பதிலாக தேர்வர்களின் விடைத்தாளிலேயே ரகசிய கோடு முதலிலேயே பிரிண்ட் செய்யப்படும். இந்த குறியீட்டை சாதாரணமாக யாரும் காணமுடியாது. அதை கம்ப்யூட்டர் மூலம்தான் அறியமுடியும். இதனால் எந்த விடைத்தாள் எங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற விவரம் தெரியாது. எனவே ரகசிய குறியீடு கொண்டு வரும் முறையை அமல்படுத்த அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. இது விரைவில் உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்ததும் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரகசிய குறியீடு முறையை வருகிற அக்டோபர் மாத தேர்வில் அமல்படுத்தலாமா என்றும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி