ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு பயன்படும் சில இணையதளங்கள் இதோ...


ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு பயன்படும் சில இணையதளங்கள் இதோ...


ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டு எளிதாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுக்கிறது பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் நடத்தும் லேர்னிங் இங்கிலீஷ் இணையதளம். ஒவ்வொரு நாளும், அந்த நாளில் நடக்கும் ஏதேனும் ஒரு சுவையான செய்தியினை அழகான முறையில் அலசுவதுடன் அதில் உள்ள முக்கியமான வார்த்தைகள், அதனை எவ்வாறு உச்சரிப்பது, அதற்கு என்ன அர்த்தம் என்பதை எல்லாம் தனியே விளக்குகிறது. ஆங்கில இலக்கணம், ஆங்கிலச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் அர்த்தங்கள் மற்றும் அதன் உச்சரிப்பு குறித்தும் எளிதாக விளக்குகிறார்கள். ஒருவேளை உங்களுக்கு முறையாக உட்கார்ந்து படிப்பதற்கு ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டு செய்திகளை ஆர்வத்துடன் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால் உங்களுக்காக இவர்களே Talking Sport என்று விளையாட்டு செய்திகளை தனியே தொகுத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பகுதிக்குள் சென்று உங்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு தொடர்பான விஷயங்களைப் படிப்பதுடன், அதில் உள்ள முக்கியமான வார்த்தைகளையும், அதற்கு என்ன அர்த்தம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இதைத்தவிர, ‘Word master’ என்ற விளையாட்டு இருக்கிறது. இதில் நீங்கள் என்ன மாதிரியான சொற்களை அறிந்து இருக்கிறீர்கள் என்பதை சோதனை செய்யும் வகையில் விளையாட்டுடன் இணைத்து இருக்கிறார்கள். இதைத் தவிர, உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்களுடன் உரையாடுவது எப்படி? பல்வேறு இடங்களில் இரண்டு பேர் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பது குறித்து உதாரணத்துடன் விளக்கி இருக்கிறார்கள்.



மேலும், இந்த இணையதளத்தின் இன்னொரு சிறப்பு, நீங்கள் படிப்பதைக் கேட்க முடிவதுடன், ஆடியோக்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும். ஆடியோவில் கேட்பதைப் படிப்பதற்கு உதவியாக அதனையும் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். ஆடியோ மற்றும் படிப்பதற்கு உதவியான ஏராளமான கோப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் நீங்கள் கேட்டோ அல்லது படித்தோ ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விற்பனை அல்லது மேலாண்மை பொறுப்புகளில் இருந்தால் அதற்கான 6 minute English என்ற பகுதி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எப்படி ஆங்கில அறிவினை போதிப்பது என்று பல விஷயங்களை போதுமான தகவல்களுடன் விளக்கி இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்க நினைப்பவர்களுக்கு இந்த இணையத்தளம் ஒரு கற்கண்டு.




அமெரிக்க அரசின் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஊடக நிறுவனத்தின் லேர்னிங் இங்கிலீஷ் என்ற இணையதளத்திலும் ஆங்கிலம் கற்பதற்கான பல்வேறு வசதிகள் உள்ளன. அத்துடன் சாமானிய மனிதர்கள் பயன்படுத்தும் ஆங்கிலச்சொற்களுக்கான புத்தகத்தையும் இது வெளியிட்டு இருக்கிறது.




சின்னக் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் இருந்து கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதற்கு உதவுவது வரை பல்வேறு தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இந்த இணையதளத்தில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதற்கு வீடியோ முறையில் பாடங்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள், இருவர் உரையாடலின் ஆடியோ ஃபைல்கள் உள்ளன.



ஆங்கில ஆசிரியர் வகுப்பு எடுப்பது போல் இலக்கணப் பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளக்கங்களுடன் படித்தவுடன் எளிதில் பதில் சொல்லும் வகையில் வினாக்களைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த இணையதளத்தை மூன்று முக்கிய அம்சங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். ஒன்று ஆங்கிலம் கற்க என்று பொதுப்பிரிவும், இரண்டாவது, இளைஞர்கள் கற்றுக்கொள்ள என்று தனிப்பிரிவு மூன்றாவதாக, குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு என்று தனிப்பிரிவும் இந்த இணைய தளத்தில் உள்ளன. குழந்தைகளுக்கான பிரிவில் ஆங்கிலத்தில் கதைகளை படிப்பது, உச்சரிப்பு பயிற்சி, விளையாட்டு மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் பயிற்சி, எழுத்துப் பயிற்சி என பல உட்பிரிவுகளும் உள்ளன. பாடல்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வழிவகை செய்திருக்கிறார்கள். கல்லூரி வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் IELTS என்ற ஆங்கில மொழித் திறனறித் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பல தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இதனைப் பார்த்து, இத்தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி