டி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதேர்வு அவசியமில்லை: பட்டதாரிகள் வேண்டுகோள்.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில், எழுத்து பிழைக்காக, மறு தேர்வு நடத்துவதை தவிர்த்து, முடிவை வெளியிட, டி.ஆர்.பி., முன்வர வேண்டும்" என முதுகலை பட்டதாரிகள் கூறினர்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை தமிழ் ஆசிரியர்காலிபணிகளுக்கு, ஜூலை 21ல் நடந்த போட்டி தேர்வில் 1.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்நிலையில், "பி" வரிசை வினாத்தாளில், அச்சுப்பிழையால்,முடிவைவெளியிடுவதில், டி.ஆர்.பி., சிக்கலை சந்தித்து வருகிறது.எனவே, எழுத்துபிழையால், விடை அளிப்பதில், எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. விடைக்கான பொருள் புரியும் படிதான், எழுத்து பிழைகள் இருந்தன. இதனால், அர்த்தம் மாறவில்லை. எனவே, மறுதேர்வு திட்டத்தை கைவிட்டு, எழுத்து பிழை உள்ள வினாக்களுக்கு சரியான விடை எழுதியோருக்கு,விடைதாள்களை சரிசெய்து, முடிவை வெளியிடவேண்டும். முதுகலை பட்டதாரிகள் கூறுகையில், "பி" வரிசை வினாத்தாளில்,"ங்" வரவேண்டிய இடத்தில், "து" வந்துள்ளது. எழுத்து மாற்றத்தால், எந்தவகையான பொருள் மாற்றங்கள் வினா அல்லது விடையில் ஏற்படவில்லை. பாடநூல்கள், போட்டி தேர்வுகளில் இது போன்ற சிறு எழுத்து பிழைகளை சரிசெய்யும் திறன், முதுகலை தமிழாசிரியருக்கு அடிப்படை தகுதியாக உண்டு.எனவே, எழுத்து மாற்றங்களை பிழைகளாக கருதக்கூடாது. ஒரு வினா அல்லது விடையில் இருக்கும் பல தொடர்களில் ஏதேனும் ஒரு சொல்லில் மட்டும் காணப்படும் எழுத்து மாற்றத்தை வைத்து, ஒட்டு மொத்தமாக தவறு இருப்பதாக கருதக்கூடாது. எனவே, எழுத்து மாற்ற பிழைகளை சரிசெய்து, தேர்வு முடிவை டி.ஆர்.பி.,வெளியிடவேண்டும்," என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி