அண்ணாமலை பல்கலை தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையை அரசுடமைக்கு தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்தார். இதன்படி இனி நியமனம் சேர்‌க்கை தொடர்பான அனைத்திற்கும் தமிழக அரசின் நடைமுறை பின்பற்றப்படும்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டதிருத்த மசோதா மே.16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் தமிழகஅரசு அரசாணையாக வெளியிடவுள்ளது என பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் புதன்கிழமை தெரிவித்தனர். இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி