தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்ந்தது.

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் இருந்து, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர், எவ்வித சிக்கலும் இன்றி சம்பளம் பெறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு, அரசாணையை வெளியிடும். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 5,146 ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்குவதற்கு வழி வகை செய்யும் அரசாணை, கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிந்துவிட்டது. ஆனாலும், அரசாணை இல்லாமலேயே, ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.இந்நிலையில், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், அரசாணை இல்லாததை சுட்டிக்காட்டி, கடந்த மாதம் சம்பளம் வழங்க, கருவூல அதிகாரிகள் மறுத்தனர். இது குறித்து, கடந்த மாதம், 24ம் தேதி,தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன், தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், 5,146 ஆசிரியர்களின் பணியிடங்களை, வரும் டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி