மாணவனின் விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியரிடம் நஷ்டஈடு வசூலிக்க உத்தரவு.

ஒடிசாவில், விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.பத்ரக்பூர் மாவட்டம், பசுதேவ்பூரை சேர்ந்தவர், சுமன். பள்ளி மாணவரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார். அனைத்து பாடங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமன், கணிதப் பாடத்தில் மட்டும், 100க்கு, ஆறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதிர்ச்சி அடைந்த சுமன், தன் கணிதவிடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய, இடைநிலை கல்வி வாரியத்திடம் விண்ணப்பித்தார்."இந்த விவகாரத்தில், தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். சுமனின் மனுவை ஏற்ற ஐகோர்ட், அவரது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது. மறுமதிப்பீடு செய்ததில், சுமன் கணிதப் பாடத்தில்,89 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு, புது மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆனாலும், தேர்வு முடிவு வெளியாக கால தாமதமானதால், சுமன், உயர் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இதையடுத்து, இடைநிலை கல்வி வாரியத்தின் பொறுப்பற்ற செயலால், தன்ஓராண்டு கால படிப்பு வீணாகி விட்டதால், நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என, ஐகோர்ட்டில், சுமன் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த ஐகோர்ட், "பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என, இடைநிலை கல்வி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இந்த தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து, கல்வி வாரியம் வசூத்துக் கொள்ளலாம் எனவும், தெரிவித்தது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி