சிபிஎஸ்இ: இந்தாண்டு முதல் ஓபன் புக் முறையில் பாடம்

சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்'எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்படஉள்ளது.

9 மற்றும் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் திறந்த புத்தக தேர்வு முறையின் அடிப்படையில் பாடங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும், ஐந்து முக்கிய பாடங்களில்,ஒன்றாக ஓபன் புக் பாட முறை தேர்வு இருக்கும் என்று கவுகாத்தி சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் திறனை வளர்க்கும் வீதமாக, பாடப்பிரிவுகளில் இல்லாத பொதுவான தகவல்கள் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளின் அடிப்படையில் வினாத்தாள் அமைக்கப்படும் என்று சிபிஎஸ்இ தலைவர் சௌத்ரி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல், திறந்த புத்தக பாட முறைக்கான பாடப் புத்தகங்கள் விநியோக்கிப்பட உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி