சூரியன் ஒரு பெரிய நெருப்பு பிழம்பு. அதில் இருந்து வரும் சக்தி வாய்ந்த அல்ட்ரா வயலட் எனும் புற ஊதா கதிர்கள் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த கூடியவை. ஆனால் வளி மண்டலத்தில் அமைந்துள்ள ஓசோன் படலம் இந்த கதிர்களை வடிகட்டி விடுகிறது. இதனால் உயிரினங்களுக்கு வரும் ஆபத்து தடுக்கப்படுகிறது. பூமிக்கு கவசம் போல இருக்கும் இந்த ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்த போது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஓசோன் அடர்த்தி குறைவதன் விளைவுகள் பற்றி தீவிரமாக பேசப்பட்டது. ஐ.நா. சபையானது, செப்டம்பர் 16ம் தேதியை உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது. ஓசோன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் எனும் வேதிசேர்மம். பெர்பியூம், சென்ட், காஸ்மெடிக், வலி நிவாரணி ஸ்பிரேக்களிலும் ஏசி பிரிட்ஜ்களிலும் குளோரோ புளூரோ கார்பன் (சிஎப்சி) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஓசோன் அடர்த்திக் குறைவால் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்கின் கேன்சர், கண் கேட்டராக்ட். மனித, விலங்குகளின் திசுக்கள் பாதிப்பு. நிறமிகள் வண்ணம் மாறுகிறது. தோல் கருத்துப் போகிறது. இனப்பெருக்க வாய்ப்பு குறைந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வெயில் அதிகளவில் உள்ளதை நாம் உணரலாம். ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.-