அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின் போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும். அதுபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும்எம்.எஸ்சி. தாவர அறிவியல் பட்டம், எம்.எஸ்சி. தாவரவியல் பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும்.சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டம், முதுகலை பட்ட ஆசிரியர் பணி நியமனத்தின்போது எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி