வகுபடுந்தன்மை

வகுபடுந்தன்மை

1ஆல் வகுபடுந்தன்மை: 

எந்த எண்ணாக இருந்தாலும் அது 1ஆல் வகுபடும்.


2ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் கடைசி இலக்கம் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால், அது 2ஆல் வகுபடும்.


3ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 3ஆல் வகுபடும்.


4ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 4ஆல் வகுபடும்.


5ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் கடைசி இலக்கம் 0 அல்லது 5ஆக இருப்பின் அது 5ஆல் வகுபடும்.


6ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும் எனில் அது 6ஆல் வகுபடும்.


7ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் முதல் இலக்கத்தை மூன்றால் பெருக்கி அடுத்துள்ள இலக்கத்தோடு கூட்டி வரும் விடை 7இன் மடங்காக இருப்பின் அந்த 
எண் 7ஆல் வகுபடும்.


8ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 8ஆல் வகுபடும்.


9ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 9ஆல் வகுபடும்.


10ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் கடைசி இலக்கம் 0ஆக இருப்பின் அது 10ஆல் வகுபடும்.


11ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண்ணின் ஒற்றை இட இலக்கங்களின் கூடுதலுக்கும், இரட்டை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் 0 ஆகவோ அல்லது 11இன் மடங்காகவோ இருந்தால் அந்த எண் 11ஆல் வகுபடும்.


12ஆல் வகுபடுந்தன்மை: 

ஓர் எண் 3 மற்றும் 4 ஆல் வகுபடும் எனில் அது 12ஆல் வகுபடும். 


Courtesy : http://vasanseenu.blogspot.in/ 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி