குருவும் சீடரும்! குட்டிக்கதை


தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்து விடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். 
ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கிஅறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை.சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.

”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” 

என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. 

அந்த குரு, துரோணர்.
அந்த சீடர் தருமர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி