உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் வலை உலவி பயர்பாக்ஸ். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் மென்பொருள்கள் மற்றும் புரோகிராம்கள், அப்ளிகேசன்களை கொண்டுவருவது அவசியமானதாகிவிட்டது.
அந்த வகையில் தமிழ்மொழியில் பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தும் விதமாக கொண்டுவந்துவிட்டனர். அதில் குறிப்பாக பயர்பாக்ஸ் வலைஉலவியைச் சொல்லலாம். மொசில்லா பயர்பாக்ஸ் பிரௌசர் முழுவதும் தமிழ்மொழியில் அமைக்கப்பட்ட புதிய பயர்பாக்ஸ் பிரௌசர் இது. ஒவ்வொரு கட்டளைச் சொற்களும் இதில் தமிழ்படுதப்பட்டு, தமிழர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தமிழ்மொழிப் பயன்பாட்டில் அமைந்த மென்பொருட்கள் எதிர்காலத்தில் கிடைக்கும்.
மென்பொருட்களின் கட்டளைச் சொற்களை தமிழில் மாற்றுவது என்பது கடினமான விடயம்தான் என்றாலும் அதையும் தற்பொழுது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து மென்பொருள் பொறியியலாளர்கள் அதனை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தி உள்ளனர்.
பயர்பாக்ஸ் வலைஉலவியில் உள்ள அனைத்து கட்டளைச் சொற்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு, ஒரு முழுமையான தமிழ் உலவியாக பயன்படுத்தக் கிடைக்கிறது.
இதில் "file" என்ற கட்டளைக்கு "கோப்பு" எனவும், "Copy" என்ற கட்டளைச் சொல்லுக்கு "நகல் எடு" எனவும் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் உலவியானது இந்திய மொழிகள் ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி உட்பட உலகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மொழிகளில் வழக்கமாக ஆங்கிலம் கலந்த மற்றும் வட்டார மொழிகளில் உள்ளது. இதில் நேவிகேசன் பார் (Navigation Bar), அமைப்புகள் (Settings), வரலாறு(Settings), பயன்பாட்டு கருவிகள் (Tools) , மற்ற வழிமுறைகள் மற்றும் பதிவிறக்கப் பாதைகள் உட்பட இடைமுகமும் (Interface) உள்ளூர் மொழியில் இருக்கும். தமிழ்மொழி பயர்பாக்ஸ் பிரௌசரைப் பயன்படுத்த தமிழ் விசைப்பலகை தேவையில்லை.
மொழிவாரியாக பயர்பாக்ஸ் பிரௌசரை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தவும்.
இந்த முகவரியில் சென்று உங்களுக்குத் தேவையான மொழியில் பயர்பாக்ஸ் பிரௌசரை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நன்றி : http://www.tholilnutpam.com/