சிபிஎஸ்இ பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பரில் திறனறிவுத் தேர்வு நடத்த சிபிஎஸ்இ வாரியம் முடிவு செய்துள்ளது.மாணவர்கள் தங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ளவும், உயர்கல்வி படிக்கும் போது பாடங்களை தேர்ந்தெடுக்க வசதியாகவும், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மேலும் மற்றவர்களின் உதவியை நாடாமல் சுயமாக சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், பாடப்பகுதியில் இல்லாது, பொது அறிவு மற்றும் உளவியியல் ரீதியாகவும் கேள்விகள் தயாரிக்கப்பட உள்ளன.10ம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, +1யில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் திறனை வளர்க்கும் வீதம் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பொறியியல், மருத்துவம் ஆகிய உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.படிப்பை முடித்து விட்டு பணிக்கு செல்லும் போது, திறனறிவுத் தேர்வு நடத்தப்படும். அந்த சமயத்தில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும், எவ்வாறு எதிர்கொள்வது என்று பதறுகின்றனர். அந்த பதட்டத்தை போக்க இந்த திறனறிவுத் தேர்வு பயன்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் விரிவான தகவல்களுக்கு www.cbse.nic.in இணையதளத்தை பார்க்கலாம்.