ட்ரையல் வெர்சன் சாப்ட்வேர் பயன்படுத்தறீங்களா? - எச்சரிக்கை ...!

எந்த ஒரு சாப்ட்வேர் என்றாலும் முதலில் அதற்கு ஒரு சோதனைப் பதிப்பை வெளியிடுவார்கள். அதன் பிறகுதான் ஒரிஜினல் சாப்ட்வேர் வெளியிடுவார்கள். ட்ரையல் சாப்ட்வேர் என்பது குறிப்பிட்ட நாட்களுக்குள் எக்ஸ்பைர் ஆகிவிடும். 

சோதனைப் பதிப்பில் (Trial Version) இரண்டு வகை உண்டு. முதல் வகை கட்டண மென்பொருள்களை விற்பனைச் செய்வதற்காக விளம்பரப் பதிப்பை வெளியிடுவார்கள். இந்த விளம்பரப் பதிப்பில் ஒரு சில வசதிகள் மட்டுமே இருக்கும். இதுபோன்ற பதிப்புகளால் பிரச்னைகள் ஏதும் ஏற்படுவதில்லை. 

ஒரிஜினல் சாப்ட்வேர் என்பது கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். பெரும்பாலானவர்கள் ட்ரையல் வெர்சன் வந்தவுடனே அவற்றை தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்திப் பார்த்துவிடுவார்கள்.

does-use-trial-version-software-or-not


கணினிக்குப் பயன்படும் அனைத்து வகையான சாப்ட்வேர்களுக்கு ட்ரைல் வர்சன் (All Type of Software have trial package) இருக்கிறது. உதாரணமாக பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கு முதலில் ட்ரைல் வெர்சன் என்ற சோதனை சாப்ட்வேர்கள்தான் முதலில் வெளியிடப்படுகின்றன.

இதுபோன்ற சாப்ட்வேர்களின் சோதனைத் தொகுப்பை ஆர்வக்கோளாறில் அதிகமானோர் டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான சோதனைத் தொகுப்பில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை என்றாலும் சில சோதனைத் தொகுப்புகளால் கணினியில் உள்ள கோப்புகளுக்கும், கணினி இயக்கத்திற்கும் நிச்சயம் பிரச்னை ஏற்படும். 

அவ்வவாறு ஏற்படும் பிரச்னையானது உடனடியாக நமக்குத் தெரியாது என்பதே உண்மை. 


1. சோதனைப் பதிப்பை சோதித்துப் பார்க்கும் அச்சோதனைப் பதிப்பைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். நம்பகமான தொகுப்பு என ட்ரையல் வர்சன் (Trusted Trial v) கொடுக்கும் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்தவும். ஏனென்றால் அந்த சோதனைத் தொகுப்பின் மூலம் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்நிறுவனம் உங்களுடைய கணினிப் பிரச்னைக்குப் பொறுப்பேற்காது. 

2. உங்களிடம் கம்ப்யூட்டர் துணை சாதனங்களான பிரிண்டர், ஸ்கேனர், கேமரா போன்றவற்றை அன்றாடம் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பீட்டா வர்சனை பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனென்றால் உங்களுடைய துணைச் சாதனங்களை வழங்கிய நிறுவனம் அந்த புதிய வர்சனுக்கு தகுந்தாற்போன்ற ட்ரைவர் அப்டேட்களை கொடுக்காமல் இருக்கலாம். இந்த சூழலில் நீங்கள் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனைப் பதிப்பைப் பயன்படுத்தும்போது நிச்சயம் அந்த துணைச் சாதனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்படலாம். 

3. துணைச் சாதனங்களைப் (Supporting Devices) போன்றே கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் மற்ற அப்ளிகேஷன்களும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்றவாறு அப்டேட் செய்யப்படாமல் இருக்கும். அவ்வாறு புதிய சோதனைத் தொகுப்பிற்கேற்ப அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன்கள் இயங்கினாலும் அதற்கு பாதுகாப்பு என்பது மிக குறைவுதான். எனவே புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ட்ரையல் வர்சனை (Trail version Operating System பயன்படுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விடயம்தான். பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. 


பிறகு எதற்கு சோதனை பதிப்பு? 

சோதனைப் பதிப்பை பதிந்து பயன்படுத்துவதால் ஒரு சில பிரச்னைகளை கணினி சந்திக்க வேண்டியதிருக்கும். கணினில் உள்ள கோப்புகளை திறக்காமல் போகலாம். சில போல்டர்கள்  இல்லாமல் போகலாம். ஏற்கனவே இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் போன்றவற்றில் படங்கள் காணாமல் போவது, கரப்ட் ஆவது போன்ற சிக்கல்கள் எழலாம். கம்ப்யூட்டரில் திடீரென பிழைச் செய்திகள் தோன்றலாம். 

அப்பொழுது ட்ரையல் வர்சன் தொகுப்புகளை பயன்படுத்த கூடாதா? 

பயன்படுத்தலாம். எப்படியென்றால் அதிக முக்கிய்துவம் இல்லாத சாதாரண கணினிகளில் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திப் பார்த்துவிட்டு அந்த சோதனை பதிப்பைப் பற்றிய கருத்துகளை அந்த நிறுவனங்களுக்கு எழுதலாம். 

நீங்கள் அன்றாட அலுவல்கள் செய்யும் கணினியில் பயன்படுத்திப் பார்க்க கூடாது. அதில் உங்களுடைய தனிப்பட்ட பைல்கள் இருக்கலாம். வர்த்தக ரீதியான முக்கியமான கோப்புகளை நீங்கள் பதிந்து வைத்திருக்கலாம். 

எனவே அதிக முக்கியத்துவம் இல்லாத செகண்டரி கம்ப்யூட்டர்களில் சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பாருங்கள். 

கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் ஹார்ட் டிரைவை ஒரு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. ஹார்ட் ட்ரைவை பேக்கப் எடுப்பதற்கு சிறந்த புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவைகள் கட்டணமாகவும் இலவசமாகவும் கிடைக்கின்றன. 

அதேபோல முக்கியமான கோப்புகளை அனைத்தையும் ஒரு பேக்கப் எடுத்து பாதுக்காத்திடுங்கள். கணினியில் ஏதேனும் பிரச்னை என்று வரும்பொழுது நிச்சயம்ம அந்த பேக்கப் உங்களுக்கு உதவும். எச்சரிக்கை இல்லாமல் செயல்பட்டால் வருத்தப்படுவது நீங்களாகத்தான் இருக்கும். 

ஹார்ட் டிஸ்க்கினை பேக்கப் எடுக்க Disk Cloning Tool போன்ற புரோகிராம்கள் உள்ளன. Clone zilla என்ற மென்பொருள் இலவசமாகவே கிடைக்கின்றன. நார்ட்ன் ஹோஸ் (Narton Ghost ) என்ற மென்பொருள் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இதுபோன்ற மென்பொருளைப் பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கை பேக்கப் எடுக்கலாம். 

இவ்வாறு பேக்கப் எடுத்ததை புதிய பதிப்பை சோதனை செய்யும்பொழுது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மீண்டும் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்து பேக்கப் எடுத்த குளோனிக் டிஸ்க் இமேஜை ஒரு சில நிமிடங்களில் பதிந்து விடலாம். 

சோதனைப் பதிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள் அவற்றைச் சோதனைச் செய்துதான் வெளியிடுகிறார்கள் என்றாலும் அவற்றிலும் சில பிழைகள் இருக்கலாம். அந்தப் பிழைகளைக் கண்டறிவதற்காகவே சோதனைப் பதிப்புகள் வெளியிடப்படுகின்றன என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

சோதனைப் பதிப்புகளை வைத்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் கணினியில் பணியாற்றிவிடலாம் என்ற சிந்தனை இருந்தால் அதுபோன்ற எண்ணங்களை விட்டுவிடுங்கள். சோதனைப் பதிப்புகள் என்பது சோதனை செய்வதற்காக மட்டுமே...

எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றால் சோதனைப் பதிப்புகளே உங்களுக்கு வேதனைப் பதிப்புகளாக மாறிவிடும். 


நன்றி  :  சுப்புடு

http://softwareshops.blogspot.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி