தமிழக அரசால் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ல் சென்னையில் விழா நடத்தி கல்விப்பணியில் சிறப்பாக பணியாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி அரசால் கெளரவிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நல்லாசிரியர் விருதுக்கு தகுதிவாய்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இயக்ககத்தால் அனுப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று மாலை தகவல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் சார்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் அறியலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.