மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றும் வசதியை, ஆறு மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்த, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றும் வசதியை, ஆறு மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்த, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

புதிய முறை : எம்.என்.பி., என்ற மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றும் வசதி, குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது. உதாரணமாக, தமிழக வட்டத்திற்குள் சேவை வழங்கும் நிறுவனத்தின் கீழ், மொபைல் சந்தாதாரராக இருக்கும் ஒருவர், தன் மொபைல் நம்பரை மாற்றாமல், மற்றொரு சேவை நிறுவனத்திற்கு மாறி கொள்ள முடியும். வேறு மாநிலங்களுக்கு மாறுதலாகி செல்லும் போது, மொபைல் நம்பரும் மாறியது. நம்பரை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றும் வசதி, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

6 மாதங்களில் : இது குறித்து, டிராய் என்ற தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் கருத்துக்களை கேட்டு இருந்தது. தற்போதுள்ள விதிமுறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசித்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், டிராய் நேற்று, ‘மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றி கொள்ளும் வசதியை, நாடு முழுவதும் அமல்படுத்தலாம்’ என, பரிந்துரை செய்தது.

இதன்படி, தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இத் திட்டத்தை ஆறு மாதத்திற்குள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் பிற மாநிலங்களுக்கு மாறி சென்றால், தமிழகத்தில் பயன்படுத்திய மொபைல் நம்பரை மாற்றாமல், அங்குள்ள சேவை நிறுவனத்திற்கு மாறி கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி