பேஸ்புக் நண்பர்களே, தவறான அவதூறு ஸ்டேடஸ் போட்டு அவதூறு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்....
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 - ன் கீழ் ஒரு நபரைப் பற்றி பழிச்சாட்டுகிற, எதனையும் செய்தல் அல்லது வெளியிடல் அவதூறு என்கிறது, அது பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்
பொருளாகவும் இருக்கலாம், அதற்கு கீழ்கண்ட 10 விதி விலக்குகள் உள்ளன, அதற்குள் வந்தால் அவதூறு ஆகாது. இதனை பத்திரிக்கை ஆசிரியர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள்.
1) பொது நலன் கருதி ஒருவரைப் பற்றி உண்மையைச் சொல்லுதல்.
2) அரசு அதிகாரிகள் அல்லது அவர்களது அரசுப்பணிகளை விமர்ச்சித்தல்,
3) ஒரு பொதுப் பிரச்சணைப் பற்றிய அபிப்பிராயத்தை சொல்லுதல்.
4) நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி விமர்சனம் செய்தல்,
5) நீதிமன்றத் தீர்ப்பபைப் பற்றி அபிப்பிராயம் சொல்லுதல்.
6)ஒரு புதிய படைப்பைப் பற்றி விமர்சனம் செய்தல்.
7)அதிகாரத்திற்குட்பட்டு கண்டனம் தொரிவித்தல்.
8)தனது மேல் அதிகாரிகள் மீது நல்ல எண்ணத்துடன் செய்யப்படும் குற்றச்சாட்டு.
9) பொது நன்மைக்காக ஒருவருடைய பண்பு நலன்களைப் பற்றி சொல்லுதல்.
10) பொது நன்மைக்காக அடுத்தவரைப் பற்றியும், பொது ஊழியர், அரசியல்வாதிகளை பற்றி மக்களிடம் எச்சரித்தல்.