தொகுப்பு செய்திகள்

தும்மல்!
தும்மல் என்பது அசுத்தமான கிருமிகளை வெளியே தள்ள நுரையீரல் இடும் உத்தரவுதான்.ஆகவே தும்மலை அடக்கக் கூடாது. அடக்கினால் அது மூளை நரம்புகளைப் பாதிக்கும். 

நதி எங்கே போகிறது?
நதி நீர் ஏன் எப்போதும் கடலுக்குச் சென்று கலக்கிறது தெரியுமா? நதிகள் கடலைவிட உயரமான இடங்களில் பிறப்பதும் உயரமான இடங்களிலேயே தவழ்ந்து வருவதும்தான் காரணம். நதிகளை விடக் கடல் இருக்குமிடம் பள்ளமாக இருக்கும்.


தாலி!
பழங்காலத்தில் தமிழகத்தில், பனை ஓலையை மணமகளின் கழுத்தில் மணமகன் அணிவித்துதான் திருமணம் என்ற சடங்கு நடந்தது.இப்படி அணிவிப்பதற்குப் பெயர் "தால பத்திரம்'. இதுவே பின்னாளில் தாலி என்று மருவியது.


மூலிகை!
மூலிகை ஏற்றுமதியில் இந்தியா முதல் 12 இடங்களில் ஒன்றாக ள்ளது.
இந்தியா ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் மூலிகைகளை ஏற்றுமதி செய்கின்றது. மூலிகை ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.


சத்தம்!
பெரும் குரலெடுத்துச் சத்தமாகக் கத்திப் பேசினால்தான் தொண்டை பாதிக்கப்படும் என்று நினைத்தால் அது தவறு. அடித் தொண்டையிலிருந்து மெதுவான குரலில் ரகசியமாகப் பேசும்போதுதான் தொண்டை அதிகம் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்களின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.


காது...
காதில் உள் காது, நடுக் காது,வெளிக் காது என்று மூன்று அடுக்குகள் உள்ளன. வெளிக்காது முதலில் கேட்கும் ஒலியைச் சேகரித்து நடுக் காதுக்கு அனுப்பும். நடுக் காதில் உள்ள மூன்றடுக்கு நரம்புகளின் வழியாக ஒலி உள் காதுக்குச் செல்கின்றது.பிறகு மூளையை எட்டி நாம் அந்த ஒலியைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். வெளிக் காதுகளில் அழுக்கு சேர்ந்தால் அது நடுக் காதையும் பாதிக்கும். எனவே,அங்கு அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓம்ப்ரோமேனி!
இது ஒரு கலை வடிவத்தின் ஆங்கிலப் பெயர். கை மற்றும் விரல்களை மாற்றி, மடக்கி,அசைத்து அவற்றின் நிழல்கள் சுவரில் படும்போது புதிய
உருவங்களை உண்டாக்கி கதை, சம்பவங்கள் ஆகியவற்றை விவரிக்கும்
கலைக்குப் பெயர்தான் இந்த OMBROMANIE!

-தொகுப்பு: எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி